Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

20 ஆவணி 2024 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 5245


இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா நோய் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படல் ஆஸ்துமா நோய்க்குரிய அறிகுறிகளாகும். இதேவேளை, சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. 

எனவே, இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் சிறுவர்கள் முக கவசம் அணிந்திருப்பது அவசியமாகும்.

மேலும், சிறுவர்கள் மத்தியில் இருமல் மற்றும் காய்ச்சலுடன் மார்பு வலி இருந்தால் நிமோனியா காய்ச்சலா என வைத்தியரிடம் சோதித்துப் பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்