Paristamil Navigation Paristamil advert login

சீனா கேமி சூறாவளியின் தாக்கம் - 50 பேர் பலி

சீனா கேமி சூறாவளியின் தாக்கம் - 50 பேர் பலி

20 ஆவணி 2024 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 6181


சீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியில் 50 பேர் பலியான சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது.

இதில் 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், 65,000 நிலச்சரிவுகளில் அந்நகரமே நிலைகுலைந்துள்ளது.

மழை தொடர்ந்து நீடிப்பதால், 23,419 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
 
மழையில் சிக்கி 50 பேர் பலியாகி இருப்பதோடு, 15 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டு பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்