Paristamil Navigation Paristamil advert login

ஆக்சன் படம்த்தின் தயாரிப்பாளர், இயக்குனர் பெயரை அறிவித்த சூரி..!

ஆக்சன் படம்த்தின் தயாரிப்பாளர், இயக்குனர் பெயரை அறிவித்த சூரி..!

19 ஆவணி 2024 திங்கள் 15:14 | பார்வைகள் : 3576


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்த சூரி ’விடுதலை’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சூரி ஹீரோவாக நடித்த ’கருடன்’ என்ற திரைப்படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பதும் இந்திய திரை உலகில் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக மாறி நடித்த படம் அதிக வசூல் பெற்றது இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை சூரி ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ என்ற படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி தனது அடுத்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய திரு‌.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும், என்று பதிவு செய்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்