பிரபல F1 நட்சத்திரத்தின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் திருட்டு
4 புரட்டாசி 2023 திங்கள் 08:16 | பார்வைகள் : 8751
இத்தாலியில் பிரபல F1 நட்சத்திரம் கார்லோஸ் சைன்ஸின் 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடந்த F1 போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியிருந்தார் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் சைன்ஸ்.
போட்டி முடிந்து சில மணி நேரத்தில் அவரது கைக்கடிகாரம் கொள்ளயடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அர்மானி ஹொட்டலில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் சிலருடன், தமது ஃபெராரி உடையுடனே திருடர்களை சைன்ஸ் துரத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக தமது விலைமதிப்பற்ற ரிச்சர்ட் மில்லே (£500,000) கைக்கடிகாரத்தை மீட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இத்தாலி பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.
முன்னர் பிரித்தானியாவின் Lando Norris என்பவரது ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரமும் கொள்ளை போனது.
ஆனால் அவருக்கு அந்த கைக்கடிகாரம் திரும்பக் கிடைக்கவில்லை என்பதுடன், கொள்ளையிட்டவர் குற்றவாளி அல்ல எனவும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan