Paristamil Navigation Paristamil advert login

கமலா ஹாரிஸை  சீண்டும் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப்

கமலா ஹாரிஸை  சீண்டும் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப்

18 ஆவணி 2024 ஞாயிறு 13:42 | பார்வைகள் : 6033


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான போட்டியானது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் அவர்கள் கமலா ஹாரிஸை சீண்டும் விதமான கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில் கமலா ஹாரிசை விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திலும் டிரம்ப் மீண்டும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) குறித்து பேசியுள்ளார். 

அவர் தனது உரையில், "ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். 

பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்துகொள்கிறார். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவர் அழகானவர்; ஆனால் நான் அவரை விட அழகாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்