Paristamil Navigation Paristamil advert login

‛ஆக்ஷன்' காட்சிகளுடன் வெளியானது ‛தி கோட்' டிரைலர்

‛ஆக்ஷன்' காட்சிகளுடன் வெளியானது ‛தி கோட்' டிரைலர்

18 ஆவணி 2024 ஞாயிறு 11:08 | பார்வைகள் : 2847


தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் வகையில் ட்ரெய்லர் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அப்பா மகன் சென்டிமென்ட் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், விஜய்யின் வழக்கமான காமெடி காட்சிகள் என ஒரு கமர்சியல் படத்திற்கு என்னென்ன அம்சங்கள் வேண்டுமோ அத்தனையும் இருக்கிறது என்பது இந்த மூன்று நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

தந்தை, இரண்டு மகன்கள் என மூன்று விதமான கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதேபோல் இந்த படத்தில் நடித்துள்ள பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஆகியோர்களுக்கும் வலிமையான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் சினேகா லைலா ஆகியோர்களுக்கு காமெடி கலந்த செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது என்பதை தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் வெங்கட் பிரபுவின் பிரமாண்டமான இயக்கம், யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த ‘கோட்’ ட்ரைலர் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.