ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு - உக்ரைனிய குழுவின் பங்களிப்பு
17 ஆவணி 2024 சனி 10:23 | பார்வைகள் : 7739
ரஷ்ய உக்ரைன் போர் பல மாதங்களை கடந்து தீவிரமடைந்து வருகின்றது.
நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயின் வெடிப்பு சம்பவத்தில் சிறிய உக்ரைனிய குழுவின் பங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயு குழாய் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வெடிப்பு காரணமாக கடுமையாக சேதமடைந்தது.
இதன் மூலம் பல ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், எரிசக்தியின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்தது.
இந்த வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா ரகசிய சதி திட்டமாக இருக்கலாம் என்று ஆரம்ப நாட்களில் கூறப்பட்டது.
இந்நிலையில், A Wall Street பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைனிய சிறிய குழு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதி திட்டமானது, உக்ரைனிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 6 கொண்ட குழுவினால் சிறிய படகின் உதவிக் கொண்டு நிறைவேற்றப்பட்டு இருப்பதாக WSJ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய உயர் பதவி ஜெனரலால் இயக்கப்பட்ட இதற்கு, $300,000 தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இதற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சம்மதம் தெரிவித்த நிலையில், பின்னர் இது தொடர்பாக CIA அறிந்து கொண்டதன் பிறகாக அதை நிறுத்தி கொள்ளுமாறும் உத்தரவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WSJ அறிக்கை வெளியாக சர்வதேச சமூகங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் தங்களுக்கு சம்மதம் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.
நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைனிய பங்களிப்பு என்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உதவியாளர் Mykhailo Podolyak தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan