'தளபதி 69' அரசியல் படமா?

16 ஆவணி 2024 வெள்ளி 11:28 | பார்வைகள் : 5785
தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் எச் வினோத் ’தளபதி 69’ படத்தை தான் இயக்குவதை உறுதி செய்துள்ளார்.
மேலும் எனது ரசிகர்கள் அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருப்பதால் இது ஒரு கமர்சியல் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறியதாகவும், இந்த படம் ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எனது படத்தை எல்லா வயதில் உள்ளவர்களும் பார்ப்பார்கள், எல்லா அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் பார்ப்பார்கள். எனவே இந்த படம் ஒரு பொதுவான படமாக இருக்க வேண்டும் என்பது என்று விஜய் கூறியுள்ளதாக எச் வினோத் தெரிவித்தார்.
மேலும் எந்த ஒரு அரசியல் கட்சியையும், அரசியல்வாதியையும் தாக்கும் படமாக இருக்காது, ஒரு லைட்டான அரசியல் கலந்த் 100% கமர்சியல் படமாக இந்த படத்தை உருவாக்க உள்ளோம்’ என்று எச் வினோத் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1