குப்பைக் கிடங்கில் பெண்களின் சடலங்கள் மீட்பு - கென்யாவில் அதிர்ச்சி சம்பவம்

14 ஆடி 2024 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 5535
கென்யாவில் நைரோபி நகரில் குப்பைக் கிடங்கில் சாக்கு மூட்டைகளில் குறைந்தது 6 பெண்களின் சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, கைவிடப்பட்ட குவாரியில் இருந்து மேலும் 5 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு சனிக்கிழமை கூறியுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகளில் மூன்றில் துண்டிக்கப்பட்ட கால்கள் மற்றும் இரண்டு உடற்பகுதிகள் உட்பட பெண் உடல் பாகங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1