Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம்... இங்கிலாந்து நட்சத்திரங்கள்  பெறும் பரிசு தொகை

 யூரோ கிண்ணம்... இங்கிலாந்து நட்சத்திரங்கள்  பெறும் பரிசு தொகை

14 ஆடி 2024 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 399


பெர்லின் நகரில் நடக்கும் யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்லும் என்றால், அவர்கள் 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியினை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் அதன் பயிற்சியாளர் Gareth Southgate ஏற்கனவே 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை சொந்தமாக்கியுள்ளார்.

நெதர்லாந்து அணியை கடைசி நிமிடத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவானதும், ரசிகர்கள் Gareth Southgate-ஐ கொண்டாடித் தீர்த்துள்ளனர். அவருக்கு மிகப்பெரிய ஊக்கத் தொகை காத்திருப்பதாகவே கூறப்படுகிறது.

யூரோ கிண்ணம் 2024-ஐ இங்கிலாந்து அணி வெல்லும் என்றால், Gareth Southgate மொத்தமாக 4 மில்லியன் பவுண்டுகள் தொகையை அள்ளிச்செல்வார். இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானதால், அவர் தற்போது 2 மில்லியன் தொகையை சொந்தமாக்கியுள்ளார் என்றே கூறுகின்றனர்.

அத்துடன், இங்கிலாந்து அணி யூரோ கிண்ணம் வெல்லும் என்றால், அனைத்து வீரர்களும் ஊதியம் மற்றும் விளம்பரங்களால் மொத்தமாக 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் சொந்தமாக்க உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான 21 வயது ஜூட் பெல்லிங்ஹாமின் சம்பாத்தியம் டேவிட் பெக்காமை முந்துவதுடன், 400 மில்லியன் பவுண்டுகள் என அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

டேவிட் பெக்காம் தமது கால்பந்து வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவரது சம்பாத்தியம் 372 மில்லியன் பவுண்டுகள் என இருந்துள்ளது. மேலும், Harry Kane, Bukayo Saka, Phil Foden, Cole Palmer மற்றும் Kobbie Mainoo உள்ளிட்ட முன்வரிசை வீரர்களின் வார ஊதியத்தில் 50,000 பவுண்டுகள் வரையில் உயரலாம்.

இதனால் ஆண்டுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் வரையில் இவர்கள் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்