காசா முனையில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் - 90 பேர் பலி....
14 ஆடி 2024 ஞாயிறு 08:55 | பார்வைகள் : 1308
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள், டிரோன்கள் மூலம் ஏவுகணைகளை காசா முனையில் அல் மவாசி பகுதியில் வீசியது.
இந்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, ஆயுதக்குழு தளபதியான முகமது டெய்ஃப் மற்றும் இரண்டாம் நிலை தளபதி ரஃபா சலாமா கொல்லப்பட்டது குறித்து இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால் டெய்ஃப் அப்பகுதியில் இருப்பதாக கூறப்படுவதை ஹமாஸ் நிராகரித்துள்ளது. மேலும், ''இந்தப் பொய்யான கூற்றுக்கள் கொடூரமான படுகொலையின் அளவை மூடி மறைப்பதாகும்'' எனவும் குற்றம்சாட்டியுள்ளது.