நூறு வயது கனடிய முதியவரின் சாகசம்

14 ஆடி 2024 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 4137
கனடாவில் நூறு வயதான முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் சாகசம் செய்து அசத்தியுள்ளார்.
நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகச நிகழ்வில் முதியவர் பங்கேற்றுள்ளார்.
வானிலிருந்து குதித்து குறித்த முதியவர் சாகசம் செய்தியுள்ளார்.
பரசூட்டின் உதவியுடன் உயரப் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து குறிப்பிட்ட அளவு தூரம் ஸஸ்கை டைவிங் செய்துள்ளார்.
தாம் இரண்டாம் உலகப் போரின் போது இந்த பயிற்சிகளை பெற்றுக் கொண்டதாக நூறு வயதான எட் மார்ஷல் தெரிவிக்கின்றார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மார்ஷலின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
சுமார் 11,000 அடி உயரத்திலிருந்து குறித்த முதியவர் குதித்து சாகசம் செய்துள்ளார்.
கனடிய ராணுவப் படையின் அடம் வின்னிகிக் என்பவருடன் இணைந்து இந்த முதியவர் வானில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார்.
ஒரு லட்சம் டாலர்களை திரட்டும் நோக்கில் இந்த சாகசம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே அவர் 90 ஆயிரம் டாலர்களை திரட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1