யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

13 ஆடி 2024 சனி 13:28 | பார்வைகள் : 5535
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் ஆரம்பமாகுமென தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாஹோ- அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது புதிய புகையிரத பாதை மாஹோ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி திறந்து வைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்திய உதவியுடன் மாஹோ -வவுனியா – காங்கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டதுடன் தற்போது மாஹோ – அனுராதபுரம் வரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1