இலங்கை வாகனங்களை வைத்திருப்போருக்கு கடுமையான எச்சரிக்கை

13 ஆடி 2024 சனி 11:25 | பார்வைகள் : 5224
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1