ஐந்துமாத குழந்தைக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தத வேளை ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல்
13 ஆடி 2024 சனி 09:26 | பார்வைகள் : 411
மருத்துவர் ஒலேகொலுங்செப்போவின் குழுவினர் ஐந்துமாத குழந்தையான டராசிற்கு சத்திரசிகிச்சை செய்துகொண்டிருந்தவேளை பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது
அவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாப்பதற்கு முயன்றனர்.
கண்ணாடித்துண்டுகள் மருத்துவர் ஒலேகொலுப்சொங்கோவை தாக்கின,அவரது சகாவின் முகத்தில் அதனால் காயங்கள் ஏற்பட்டன.
ஐந்துமாத குழந்தை சத்திரகிசிச்சை மேசையிலேயே காணப்பட்டது,அதனை சுற்றி சேதமடைந்த உபகரணங்களும் இரத்தக்காயங்களுடன் மருத்துவர்களும் காணப்பட்டனர்.
எல்லோரும் உயிருடன் இருக்கின்றீர்களா என தான் சத்தமிட்டதை வைத்தியர் ஒலே ஹொலுப்செங்கோ நினைவுகூர்ந்தார்.
செயற்கை சுவாசக்கருவி சேதமடைந்ததால்- குழந்தை தொடர்ந்தும் சுவாசிப்பதை உறுதிப்படுத்துவதற்காக மயக்கமருந்து நிபுணர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார்,அவர் பயன்படுத்தினார்.
தாக்குதல் காரணமாக கூரைஇடிந்து விழக்கூடும் என்ற அச்சம் காரணமாக சிலமருத்துவர்கள் டராசுடன் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு ஒடினார்கள்.
உக்ரைன் தலைநகரில் உள்ள சிறுவர் மருத்துவமனையை ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கிய பின்னர் இடம்பெற்ற சம்பவங்களே இவை.
இந்த தாக்குதல் உக்ரைனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,உக்ரைனும் மேற்குலக நாடுகளும் இந்த தாக்குதலிற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளள.
உக்ரைனின் நகரங்களின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் போது சிறுவர்மருத்துவமனை தாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள ரஸ்யா தனது ஏவுகணை மருத்துவமனையை தாக்கவில்லை உக்ரைனின் ஏவுகணையே தவறுதலாக விழுந்து வெடித்தது - என குறிப்பிட்டுள்ளது .- எனினும் இதற்கான ஆதாரங்களை ரஸ்யா வெளியிடவில்லை.
இந்த மருத்துவமனை பெருமளவிற்கு தரைமட்டமாகியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை பல நோயாளிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் பணியாளர்களும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு சென்றுவிட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.- இருவர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்துள்ளனர்.
என்னை பொறுத்தவரை இந்த மருத்துவமனை குழந்தைகளிற்கும் பெரியவர்களிற்கும் பாதுகாப்பான இடம் என நான் நினைத்திருந்தேன்,ஆனால் தாக்குதல் இடம்பெற்ற அன்றுதான் நான் எங்கும் பாதுகாப்பான இடம்என்பது இல்லை என உணர்ந்தேன் என 39 வயது இவானொவ் ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.
அவர் சிறிய காயங்களில் இருந்து மீண்டுகொண்டிருக்கின்றார்.
மருத்துவமனையின் அடித்தளத்திற்கு சென்றவேளை அங்கு புகைமண்டலமும் அலறல்களும் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் அங்கு குழந்தைக்கு மீண்டும் சுயநினைவை ஏற்படுத்திய பின்னர் மற்றுமொரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.
டராசினை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை தனது முகத்தை தாக்கிய கண்ணாடிச்சிதறல்களை அகற்றிவிட்டு கொலெட்கா தான் எப்படி உதவலாம் என பார்ப்பதற்காக வெளியில் ஓடினார்.
அவரின் கண்முன்னால் நச்சுப்பொருட்களிற்கான கட்டிடம்தரைமட்டமாகியிருந்தது.
எனது காயங்களில் இருந்து குருதி வெளியேறாததால் நான் வெளியில் சென்று காயமடைந்தவர்களிற்கு உதவ முயன்றேன் என அவர் தெரிவித்தார்.
அந்த தருணத்தில் அது கடினமான விடயமா - இலகுவான விடயமா என நாங்கள் சிந்திக்கவில்லை.நாங்கள் எங்கள் பணியை செய்தோம் உதவமுயன்றோம் என அவர் குறிப்பிட்டார்.
அன்று முழுவதும் கடும் வெப்பம் புழுதியின்மத்தியில் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகளிற்கு அவர் உதவினார்.
அவர் வீட்டிற்குதிரும்பிய வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
ரஸ்யா உக்ரைனின் மின்கட்டமைப்பை தற்போது இலக்குவைப்பதால்மின்துண்டிப்பு அடிக்கடி நிகழ்கின்றது.
ஹொலொன்ட்டும் ஹொலுப்சென்கோவும் மறுநாள் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினர்.
டரஸ் சத்திரகிசிச்சையின் பின்னர் நல்ல நிலையில் உள்ளான் என அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி