Célya எனும் குழந்தை கடத்தி கொலை தாயின் நண்பர் கைது.
13 ஆடி 2024 சனி 07:04 | பார்வைகள் : 2839
நேற்று வெள்ளிக்கிழமை Seine-Maritime பகுதியில் 6 வயது குழந்தை Célya கடத்தப்பட்ட செய்தி காவல்துறையினரால் வெளியிடப்பட்டு தேடுதல் தொடங்கப்பட்டதுடன் பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் கோரப்பட்டு இருந்தது.
'Gendarmes' காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் உலங்குவானூர்தி போன்றவற்றின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு வந்த நிலையில் கடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் வாகனம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இதனால் அந்தப் பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது.
சந்தேகநபர் கைவிட்டு சென்று வாகனம் தரித்து நின்ற இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் காணாமல் ஆக்கப்பட்ட ஆறு வயது குழந்தை Célya வின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த தேடுதலில் குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயாரின் நண்பரையும் குழந்தையின் தாயாரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.