பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த நான்கு அகதிகள் பலி...!!

12 ஆடி 2024 வெள்ளி 16:21 | பார்வைகள் : 7789
பிரான்சின் Boulogne-sur-Mer நகர கடற்கரையில் இருந்து படகு மூலம் பிரித்தானியா நோக்கிச் செல்ல முற்பட்ட அகதிகளில் நால்வர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 63 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்று அதிகாலை 4.30 மணிக்கு விபத்துக்குள்ளானது. காற்றடிக்கப்பட்ட படகுகளில் ஒன்றில் ஓட்டை ஏற்பட்டு, தண்ணீருக்குள் கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்த நான்கு அகதிகள் உயிரிழந்தனர்.
கடற்படையினர் அழைக்கப்பட்டு, உடனடியாக மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர். 56 பேர் கடலில் இருந்து தரைக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குக்கு போராடி வருகின்றனர்.
அகதிகளில் பெரும்பாலானோர் சோமாலி, எரிதியோபியா, எதியோப்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025