Stade de France அருகே மகிழுந்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு..!

12 ஆடி 2024 வெள்ளி 14:41 | பார்வைகள் : 10122
ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மகிழுந்து (Voiture) ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் உள்ள Stade de France அரங்கிற்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயது குறிப்பிடப்படாத ஆண் ஒருவரது சடலம் மகிழுந்துக்குள் இருந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
தலையில் குண்டு துளைத்த நிலையில், இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.