Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி : செல்வப்பெருந்தகை

காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி : செல்வப்பெருந்தகை

12 ஆடி 2024 வெள்ளி 10:01 | பார்வைகள் : 5781


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்.,கை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி'' என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தனி நபர்களை தாக்கிப் பேசுவது பா.ஜ.,வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும். தமிழகத்தில் தற்போது தான் அதனை துவங்கி உள்ளனர். தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆட்சியாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்