'மங்காத்தா 2 உருவாகிறதா?

11 ஆடி 2024 வியாழன் 16:11 | பார்வைகள் : 7699
அஜித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் திடீரென சந்தித்து உள்ளதாகவும் இதனை அடுத்து ’மங்காத்தா 2’ படம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மங்காத்தா’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் அஜித்தின் 50 வது படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து ’மங்காத்தா 2’ படம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருக்கிறது என்றும் அஜித் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பி விடலாம் என்றும் வெங்கட் பிரபுவும் பலமுறை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் ’கோட்’ படத்தை இயக்கி முடித்துள்ள வெங்கட் பிரபு திடீரென அஜித்தை சந்தித்துள்ளதை அடுத்து ’மங்காத்தா 2 ’ படம் குறித்து இருவரும் பேசி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் அவர் ’மங்காத்தா 2’ படத்திற்காக இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025