Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியதாக அறிவிப்பு!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியதாக அறிவிப்பு!

11 ஆடி 2024 வியாழன் 13:15 | பார்வைகள் : 8429


இலங்கையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களும் பதவி விலகியதாக அறிவித்து அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக ஆயிரம் பேருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த ரயில்வே சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இல்லாவிடில் இன்று (11) மாலை  நிறைவேற்று சபை கூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்