Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - ஓருவர் பலி - மூவர் காயம்

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - ஓருவர் பலி - மூவர் காயம்

11 ஆடி 2024 வியாழன் 11:10 | பார்வைகள் : 1828


முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி  விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர்களை  விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று ஏ 9 வீதியின் 241 ஆவது கிலோமீற்றருக்கும் 242 ஆவது கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த  நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்  சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்