Paristamil Navigation Paristamil advert login

கருணாநிதி காலத்திற்கு பிறகுதான் தீய அரசியல் துவங்கியது: சீமான் !

கருணாநிதி காலத்திற்கு பிறகுதான் தீய அரசியல் துவங்கியது: சீமான் !

11 ஆடி 2024 வியாழன் 08:09 | பார்வைகள் : 570


கருணாநிதி காலத்திற்கு பின்னர்தான் தீய அரசியல் துவங்கியது ' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த சீமான்; ' இவர் கைதுக்கான காரணம் என்ன?. என்னை விடவா அவர் பேசிவிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னை கைது செய்து பாருங்கள். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்கின்றனர்.

பாடல் பாடியசீமான்

' கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது. நான் பாடல் பாடுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி! சதிகாரன் கருணாநிதி!' என நான் பாடுகிறேன் என்று சீமான் பாடல் பாடி காட்டினார். என் மீது முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள். நீங்க பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுவீர்கள். தேள், பாம்புவை பிடிப்பீர்களா?. புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா?.

தீய ஆட்சி
நீங்க ஆட்சிக்கு வந்ததால் உங்க அப்பாவை புனிதர் ஆக்க முயற்சிக்கிறீர்களா?. தமிழினத்திற்கு செய்த துரோகம் எல்லாம் மறந்து போய்விடுமா?. தமிழினத்தின் துரோகி கருணாநிதி. இந்த நாட்டில், தமிழர் இன வரலாற்றில், தீய ஆட்சி மற்றும் தீய அரசியலின் துவக்கம் கருணாநிதி ஆட்சியில் தான். இதனை யாராலும் மறுக்க முடியுமா? அண்ணாத்துரை இருந்த வரை உள்ள அரசியலை எடுத்து பாருங்கள். எவ்வளவு நாகரீகம், கண்ணியம் இருந்தது என்று பாருங்கள்.

ஊழல், லஞ்சம், கொலை
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள். அநாகரீக அரசியல், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசவே கூடாதா?. முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பேசலாம். அது கருத்துரிமை. நாங்கள் பேசினால் அவமதிப்பா?. இவ்வாறு சீமான் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்