Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : 15 வயதுடைய சிறுமியைக் காணவில்லை.. தேடுதல் பணி தீவிரம்.!

Hauts-de-Seine : 15 வயதுடைய சிறுமியைக் காணவில்லை.. தேடுதல் பணி தீவிரம்.!

11 ஆடி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 9414


Rueil-Malmaison (Hauts-de-Seine) நகரில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.

கடந்த ஜூலை 1 ஆம் திகதி மாலை அவர் காணாமல் போயுள்ளார். இன்றுடன் பதினொரு நாட்களாக தேடுதல் முயற்சிகளின் இடம்பெற்று வருகிறது. 1 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு நடை பயிற்சிக்காக சென்றிருந்த Soraya எனும் சிறுமியே காணாமல் போயுள்ளார். 

அவர் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் உதவி கோரியுள்ளனர். சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அழைப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்