பாடசாலை மீது திடீர் தாக்குதல் நடத்திய இஸ்ரேயல்
10 ஆடி 2024 புதன் 15:13 | பார்வைகள் : 1650
பாலஸ்தீன குடிமக்கள் உடனடியாக காசா நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை இந்த போரில் 38,243 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 88,243 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் மொத்தமாக இஸ்ரேலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணியாலயத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 52 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாலஸ்தீனிய குடிமக்கள் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்து இருந்த பாடசாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படையினருடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.