Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ட்ராமுடன் மோதிய பேருந்து... பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!

பரிஸ் : ட்ராமுடன் மோதிய பேருந்து... பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!

9 ஆடி 2024 செவ்வாய் 15:50 | பார்வைகள் : 8076


பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Porte de Choisy பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ட்ராம் ஒன்றும், பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Keolis நிறுவனத்தால் இயக்கப்படும் T9 வழிச் சேவை ட்ராமும், RATP இனால் இயக்கப்படும் 323 வழிச் சேவை பேருந்து ஒன்றுமே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இன்று ஜூலை 9, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.50 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் பேருந்தில் பயணித்தவர்கள், ட்ராமில் பயணித்தவர்கள் என மொத்தமாக 13 பேர் வரை காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

T9 ட்ராம் ஒன்று கடந்த வாரத்திலும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்