கனடாவில் மீட்கப்பட்ட மூவரின் சடலங்கள்
9 ஆடி 2024 செவ்வாய் 09:08 | பார்வைகள் : 1009
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில்காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர்.
எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின் போது பல்வேறு சவால்களை இந்த மலையேறிகள் எதிர்நோக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் குறித்த மலையேறிகளின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.