காஜல் அகர்வால் 'இந்தியன் 2' புரமோஷனுக்கு வராதது ஏன்?

9 ஆடி 2024 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 6871
கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீதி சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்த வாரம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ள படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்கு மட்டும் காஜல் அகர்வால் வந்திருந்தார். அதன்பிறகு சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சிகள் எதற்கும் அவர் வரவில்லை. டிவி, யுடியூப் பேட்டிகள் எவற்றிலும் அவர் இடம் பெறவில்லை. ஏன் அவர் வரவில்லை, எதற்காகத் தவிர்க்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார். “இந்தியன் 2, படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் கிடையாது. 'இந்தியன் 3' படத்தில்தான் அவரது காட்சிகள் இடம் பெறுகின்றன. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அதில் அவர் நடித்திருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 3' படம் வெளியாகும் போது அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாராம்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025