இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு - வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதென சந்தேகம்

8 ஆடி 2024 திங்கள் 16:09 | பார்வைகள் : 4687
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.
அதேநேரம், அத்துருகிரிய நகரில் இன்று மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்திய மகிழுந்து கடுவலை – கொரதொட பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த மகிழுந்தில் பயணித்த இரண்டு பேரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025