Paristamil Navigation Paristamil advert login

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் - உக்ரைன்க்கு விஜயம்

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் - உக்ரைன்க்கு விஜயம்

8 ஆடி 2024 திங்கள் 07:36 | பார்வைகள் : 9135


பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள John Healey, சனிக்கிழமையன்று உக்ரைன் சென்றிருந்தார்.

உக்ரைன் ஜனாதிபதியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சைரன் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, அனைவரும் பரபரப்பானார்கள். 

ரஷ்ய ஏவுகணை ஒன்று ஏவப்படுவது குறித்து எச்சரிக்கும் சைரன் ஒலியாகும்.

உடனடியாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஜான் ஹீலியும், பிரித்தானிய பாதுகாப்பு அலுவலர்களின் தலைவரான Admiral Sir Tony Radakinம், பாதுகாப்பான கட்டிடம் ஒன்றின் தரைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

ரஷ்யப் படைகள் உயிர் பயத்தைக் காட்டியும், எந்த பதற்றத்தையும் வெளிக்காட்டாத ஜான் ஹீலி, சட்டைக் கையை மடக்கிவிட்டுக்கொண்டு, நாம் பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என உக்ரைன் ஜனாதிபதியிடம் கூலாக கூறியுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்