Paristamil Navigation Paristamil advert login

புளோரிடாவில் 1 சென்ட் காசுக்காக சிறை சென்ற நபர்...!

புளோரிடாவில் 1 சென்ட் காசுக்காக சிறை சென்ற நபர்...!

8 ஆடி 2024 திங்கள் 07:28 | பார்வைகள் : 6000


அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

அதிகாரியின் பதிலால் பொறுமை இழந்த மைக்கேல், என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா...? என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அதிகாரி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இந்நிலையில் அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்