படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம்

8 ஆடி 2024 திங்கள் 03:26 | பார்வைகள் : 8899
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. மேலும், அரசின் அனுமதி பெற்று பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய பொத்தூரில் உள்ள ரோஜா நகருக்கு இன்று கொண்டுவரப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடல் வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக பொத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பொத்தூர் கொண்டு செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புத்த மத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025