Paristamil Navigation Paristamil advert login

மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்  ரஷ்ய ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்  ரஷ்ய ஜனாதிபதி

6 ஆடி 2024 சனி 16:30 | பார்வைகள் : 7090


உக்ரைனில் வெற்றி பெற அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோவிற்கு செய்தி அனுப்பியுள்ளார். 

அதில், ''உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதில் அதிக தூரம் செல்ல வேண்டாம். 

 ரஷ்யாவுடன் நீங்கள் மோதலுக்கு ஆளாக நேரிடும். அது விரைவில் அணுசக்தியாக மாறக்கூடும்.

உக்ரைனில் போர் மெதுவாக மாஸ்கோவிற்கு சாதகமாக மாறியதால், இலக்குகளை அடைய அணு ஆயுதங்கள் தேவையில்லை. 

ஆனால் ரஷ்யா அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாது என்று மேற்கத்திய நாடுகள் கருதுவது தவறு'' என எச்சரித்துள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்