தவறுகளில் இருந்து பா.ஜ., தப்பிக்க முடியாது: கார்கே எச்சரிக்கை
 
                    6 ஆடி 2024 சனி 11:06 | பார்வைகள் : 6535
வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., தனது தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், மல்லிகார்ஜூன கார்கே கூறியிருப்பதாவது: இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், பொய் சொல்லப்படுகிறது. அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
முறைகேடுகள்
கல்வி மாபியாவை ஊக்குவித்து ஒட்டுமொத்த கல்விமுறையையும் பா.ஜ., கையகப்படுத்தியுள்ளது. தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிடுவதன் மூலம் பா.ஜ., அரசு, நமது கல்வி முறையை அழிக்க குறியாக உள்ளது. இளநிலை நீட் தேர்வு, மீண்டும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்.
வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பா.ஜ., தனது தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan