உன்னை பார்த்ததும் எனக்கு பிடித்தது
5 ஆடி 2024 வெள்ளி 12:46 | பார்வைகள் : 6322
உயிரானவளே...
மண்ணில் விதைத்த விதைகளை
எல்லாம் பூத்து குலுங்குது...
உன்னால் என் மனதில்
காதல் வளர்ந்ததால்...
என் மனமும் பூத்து
குலுங்குதடி நித்தம்...
உன்னை பார்த்ததும்
எனக்கு பிடித்தது...
எனக்கு பித்து
பிடிக்கும் அளவுக்கு...
பிடித்து போகும் என்று
நினைக்கவில்லை அன்று...
ஆழ்கடலில் சிப்பிக்குள்
இருக்கும் முத்துப்போல...
நீ இருப்பாய் என்றும்
என் மனதில் மனதுக்குள்...
சப்தமின்றி முத்தம்
கொடுக்கும் வித்தையை...
எனக்கு சொல்லி
கொடுத்தது நீதானடி...
ஆயிரம் சிந்தனைகள்
மனதில் இருந்தாலும்...
உன்னை பற்றிய சிந்தனைகள்தான்
தென்றலாய் என்னை வருடுதடி...
சாலையோரம் நாம்
நடக்கையில் விரல் கோர்க்க...
என் வலது கை விரல்
உன் இடது கை விரலை தேடுதடி...
சாலையோர
பயணத்தில் மட்டுமல்ல...
வாழ்க்கை பயணத்திலும் சேர்ந்து
நாம் பயணிக்க வேண்டுமடி...
என் உயிரே.....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan