அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகனாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்
31 ஆவணி 2023 வியாழன் 09:14 | பார்வைகள் : 8007
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரிவர்சைடு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களே எடுத்தது.
அதிகபட்சமாக பிலிப்ஸ் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரைடன் கார்ஸ், நியூசிலாந்தின் ஃபின் ஆலனை கிளீன்போல்டாக்கி வெளியேற்றினார்.
அதேபோல் மில்னேவையும் போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
4 ஓவர்கள் வீசிய கார்ஸ் 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கார்ஸ் ஆட்ட நாயகன்
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.
டாவித் மாலன் 54 ஓட்டங்களும், ஹரி புரூக் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசிய பிரைடன் கார்ஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.

























Bons Plans
Annuaire
Scan