Paristamil Navigation Paristamil advert login

பெனால்டி ஷாட்டினை வெளியே அடித்த மெஸ்ஸி...! 

பெனால்டி ஷாட்டினை வெளியே அடித்த மெஸ்ஸி...! 

5 ஆடி 2024 வெள்ளி 09:10 | பார்வைகள் : 5178


ஈகுவடார் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 4-2 என பெனால்டிஷூட்டில் வென்றது. 

கோபா அமெரிக்கா 2024யின் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா (Argentina) மற்றும் ஈகுவடார் (Ecuador) அணிகள் மோதின.

NRG மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், 35வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் லிசான்ட்ரோ மார்ட்டினெஸ் (Lisandro Martinez) 35வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

அதன் பின்னர் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க போராடினர். இறுதியாக 90+1வது நிமிடத்தில் கெவின் ரோட்ரிகஸ் (Kevin Rodriguez) மூலம் ஈகுவடார் அணிக்கு கோல் கிடைத்தது.

கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. 


முதல் வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். அவர் அடித்த ஷாட் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது. இது மெஸ்ஸி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 

எனினும் ஆல்வாரெஸ் (Alvarez), அலெக்சிஸ் (Alexis), மொன்டிஎல் (Montiel) மற்றும் ஒட்டமெண்டி (Otamendi) ஆகியோர் கோல் அடித்தனர். 

மறுமுனையில் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் (Emiliano Martinez) சிறப்பாக செயல்பட்டு ஈகுவடார் வீரர்களின் ஷாட்களை தடுத்தார்.

இதன்மூலம் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்