அட்லாண்டிக்கில் சமுத்திரத்திலிருந்து 89 பேரின் உடல்கள் மீட்பு
5 ஆடி 2024 வெள்ளி 07:57 | பார்வைகள் : 8099
அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை.
ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன.
கடந்த வருடம் இந்த தீவிற்கு 40,000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan