மகிழுந்து மோதி 18 மற்றும் 19 வயதுடைய இருவர் பலி..!!
4 ஆடி 2024 வியாழன் 18:16 | பார்வைகள் : 15927
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தெற்கு பிரான்சான Aveyron நகரில் இடம்பெற்றுள்ளது. அவசரப்பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு மருத்துவப்பிரிவின் விரைந்து சென்றனர். அங்கு இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அவர்கள் மிதிவண்டியில் சென்ற போது வேகமாக வந்த மகிழுந்து ஒன்று அவர்கள் மீது மோதிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகவும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதேவேளை பொதுமக்களிடன் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜொந்தாமினர், கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan