நீந்துவதற்கு ஏற்றதாக தயாராகியுள்ள சென் நதி!
4 ஆடி 2024 வியாழன் 15:32 | பார்வைகள் : 10283
சென் நதி நீச்சல் போட்டிகளுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென் நதி மாசடைந்திருப்பதாகவும், நீந்துவதற்கு உகந்தது இல்லை எனவும் கடந்த வாரங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சென் நதி தயாராகி விடும் எனவும், ‘நான் அதில் நீந்துவேன்!’ என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்திருந்தமையும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது சென் நதி நீந்துவதற்கு தயாராகியுள்ளதாக பரிஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வின் போது சென் நதியில் படகுகளில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. அதற்காக ஒத்திகைகள் வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan