இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து - பலர் காயம் - சிலரது நிலைமை கவலைக்கிடம்
4 ஆடி 2024 வியாழன் 11:40 | பார்வைகள் : 6125
சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நிகழும் போது அந்த பகுதியில் மழையுடன் கூடிய வானிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan