இலங்கையின் LPL தொடரில் மிரட்டும் பாகிஸ்தான் வீரர்! 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகள்

4 ஆடி 2024 வியாழன் 07:47 | பார்வைகள் : 7001
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் LPL டி20 தொடரில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
இலங்கையில் 5வது LPL டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணியில் பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷதாப் கான் இடம்பெற்றுள்ளார்.
கண்டி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஷதாப் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுடன், 22 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் அணையின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருதையும் ஷதாப் கான் (Shadab Khan) வென்றார்.
இந்த நிலையில் நேற்று நடந்த காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக பந்துவீசிய ஷதாப் கான், 4 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். 25 வயதாகும் ஷதாப் கான் சர்வதேச டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 85 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1