பிரித்தானிய தேர்தல் - பெண் ஜோதிடரின் கணிப்பு
4 ஆடி 2024 வியாழன் 07:44 | பார்வைகள் : 7921
பிரித்தானியாவில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வெற்றி யாருக்கு என்பதைக் குறித்த கருத்துக்கணிப்புகள் பல வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், பெண் ஜோதிடர் ஒருவர், பிரித்தானிய தேர்தலில் வெற்றி யாருக்கு என கணித்துள்ளார்.
பிரபல பெண் ஜோதிடரான Inbaal Honigman, தேர்தலில் வெற்றி பெறப்போவது எந்தக் கட்சி, யார் பிரதமராகப்போகிறார் என்பது குறித்து கணித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர், சட்டத்துறையில் பணியாற்றிய ஒருவர், அவர் அமைதியானவர் என பெயரெடுத்தவர் என தனது ஜோதிடம் சொல்வதாகத் தெரிவித்துள்ளார் Inbaal. இந்த கணிப்புகள், லேபர் கட்சியின் தலைவரான சர் கெய்ர் ஸ்டார்மருக்கு பொருந்துவதாக தெரிவித்துள்ளார் அவர்.
ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பொருத்தவரை, எதிர்பார்த்ததைவிட குறைவான வாக்குகளே அவர்களுக்குக் கிடைக்கும் என்று கூறும் Inbaal, அதனால் கட்சிக்குள் கோபமும் பதற்றமும் ஏற்படும் என்கிறார்.
லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி, வாக்காளர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிடும் என்றும் கூறியுள்ள Inbaal, கிரீன்ஸ் கட்சிக்கு இருக்கைகள் கிடைக்காது என்றாலும், நல்ல ஆதரவு இருக்கும் என்றும், நைஜல் ஃபாராஜின் Reform கட்சிக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்றும், என்றாலும், அக்கட்சி மற்ற கட்சிகளுடன் இணைந்துகொள்ள விரும்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan