Château de Rambouillet கோட்டைக்குள் நுழைந்து பணம் திருடிய ஒருவர் கைது..!
2 ஆடி 2024 செவ்வாய் 13:56 | பார்வைகள் : 16355
Yvelines மாவட்டத்தில் உள்ள Château de Rambouillet கோட்டைக்குள் நுழைந்து, €5,000 யூரோக்கள் பணம் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடன் ஒருவர், குறித்த கோட்டையின் ஜன்னல் வழியாக உள் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து €5,000 யூரோக்கள் பணத்தினை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அவசர சமிக்ஞை ஒலிக்கவிடப்பட்டு காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர். பின்னர் கண்காணிப்பு கமராவின் உதவியோடு குறித்த திருடன் தேடி கண்டுபிடிக்கப்பட்டார். 27 வயதுடைய குறித்த நபர் Loiret நகரில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan