Paristamil Navigation Paristamil advert login

மகாராஜா இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா

மகாராஜா இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா

2 ஆடி 2024 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 1223


குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். குறைந்த பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றதுடன், இயக்குநர் நித்திலனுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் விதார்த், பாரதிராஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குரங்கு பொம்மை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நித்திலன் சாமிநாதன் இயக்கிய திரைப்படம் தான் மகாராஜா.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி நல்ல வசூலும் ஈட்டியது.

இரண்டே படங்களின் மூலம் உச்சத்திற்கு சென்ற இயக்குநர் நித்திலன், அடுத்து நயன்தாராவை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெண் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் கொண்ட கதைக்களத்தை இயக்க உள்ளதாகவும், இதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வௌியாகி உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்