பரிஸ் : ஒன்பதாவது தளத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி.. - மகன் கைது..!!
1 ஆடி 2024 திங்கள் 11:49 | பார்வைகள் : 10462
ஒன்பதாவது தளத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அவரச இலக்கத்துக்கு தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 14 ஆம் வட்டாரத்தின் rue de Gergovie வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் ஒன்பதாவது தளத்தில் இருந்து 60 வயதுடைய ஒருவர் விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விசாரணைகளில், மேற்குறித்த சம்பவத்தின் போது அவரது 28 வயதுடைய மகன் அங்கு இருந்ததாகவும், அதன் பின்னரே அவர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஒருமணிநேரம் கழித்து 10 ஆம் வட்டாரத்தின் rue du Faubourg Saint-Martin வீதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan