விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா...!

1 ஆடி 2024 திங்கள் 11:26 | பார்வைகள் : 9179
தமிழ் திரையுலகின் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். ஆண்டுக்கு ஒரிரு திரைப்படங்கள் வெளியானாலும், அவை அனைத்துமே ஹிட் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
இதைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். மேலும், படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தி கோட் திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்குவதாகவும், படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைப்பதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் தகவலாக இத்திரைப்படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. முதலில் தெலுங்கு நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது புதிய தகவல் கசிந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதத்திற்குள் தொடங்கும் என்றும் அண்மைத் தகவல் வெளியாகி உள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025