மெற்றோவில் பயணிகளுக்கு வழிகாட்டியாக மாறிய முன்னாள் பிரதமர்!
3 ஆவணி 2024 சனி 08:46 | பார்வைகள் : 17150
பிரான்சின் முன்னாள் பிரதமரும் இந்நாள் RATP போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான Jean Castex, மெற்றோவில் பயணித்த பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டார்.
நேற்று ஓகஸ்ட் 2 ஆம் திகதி Porte de Saint-Cloud நிலையத்தில் அவர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கைகளின் இளஞ்சிவப்பு நிறத்தில் கையுறை ஒன்றை அணிந்துகொண்டு, மறு கையில் ஒலிவாங்கி ஒன்றை வைத்துக்கொண்டு, பயணிகளுக்கு வழி காட்டிக்கொண்டிருந்தார். ஊடகவியலாளர் ஒருவர் அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தங்களில் பகிர்ந்துள்ளார்.

13 ஆம் இலக்க மெற்றோ நேற்றைய தினம் தடைப்பட்டிருந்தது. ஒருமணிநேரத்துக்கும் மேலாக மெற்றோ தடைப்பட்டதை அடுத்தே பயணிகளுக்கு இந்த வழிகாட்டியாகவும், அவர்களின் கேள்விகளுக்கும் Jean Castex பதிலளித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan