Paristamil Navigation Paristamil advert login

அனுமதி இல்லாமல் ஒரு நிமிட காட்சி விஜய் மில்டன் அதிர்ச்சி தகவல்..!

அனுமதி இல்லாமல் ஒரு நிமிட காட்சி விஜய் மில்டன் அதிர்ச்சி தகவல்..!

2 ஆவணி 2024 வெள்ளி 14:17 | பார்வைகள் : 1475


விஜய் ஆண்டனி நடித்த ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட காட்சியை எனக்கே தெரியாமல் இடம் பெற்றுள்ளது என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் வசனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தில் ஒரு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் குறித்த சஸ்பென்சை முதல் பாதி முழுவதும் கொண்டு வந்திருந்தேன் என்றும், சென்னைக்கு வரும் நாயகன் யார்? அவருடைய பின்னணி என்ன? அவனது முகத்தில் உள்ள காயத்திற்கு என்ன காரணம்? என்பது உள்பட பல கேள்விகள் முதல் பாதையில் எழுப்பப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் திடீரென ஒரு நிமிட காட்சி இந்த படத்தில் எனக்கே தெரியாமல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஒரு நிமிட காட்சியில் இந்த இந்த படத்தின் நாயகன் குறித்து அனைத்து ரகசியங்களும் வெளியாகி உள்ளன என்றும் நான் ரசிகர்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் அந்த ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனருக்கே தெரியாமல் ஒரு படத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ஒரு நிமிட காட்சி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த வீடியோ பரபரப்பாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்