ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ..!!
2 ஆவணி 2024 வெள்ளி 13:31 | பார்வைகள் : 13402
பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Tuileries பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத ஒலிம்பிக் பலூன் பலரது கவனத்தை ஈத்து வருகிறது. அதனை அங்கேயே நிரந்தரமாக அமைக்க பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் வரை குறித்த பலூன் அங்கு இருக்கும் என தெரிவிக்கப்படும் நிலையில், அதனை நிரந்தரமாகவே அங்கேயே பறக்கவிடுவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இன்று ஓகஸ்ட் 2 ஆம் திகதி பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மேற்குறித்த பலூனை ஒலிம்பிக் போட்டிகளின் பின்னரும் காட்சிப்படுத்துவது தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
அதில் குறித்த பலூனை அங்கேயே நிரந்தரமாக வைக்க அவர் விரும்புவதாகவும், அதுவே பரிஸ் மக்களின் விருப்பமும் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈபிள் கோபுரம்..!
இதேபோலவே, 1889 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச கண்காட்சிக்காக அமைப்பட்ட ஈஃபிள் கோபுரம் பின்னர், பரிஸ் மக்களின் கோரிக்கைக்கையின் அடிப்படையில் அது அங்கேயே நிரந்தரமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan